in

வெஜிடபிள் பான்கேக் – Vegetable Pan Cake Recipe in Tamil

வெஜிடபிள் பான்கேக் – Vegetable Pan Cake Recipe in Tamil
வெஜிடபிள் பான்கேக் – Vegetable Pan Cake Recipe in Tamil


நமது காலையை நாம் சத்தான உணவோடு தொடங்கினால் அது நம்மை நாள் முழுக்க முழு ஆற்றலோடு வைத்திருக்க உதவும்.

காலை உணவு நம் அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான அங்கம். நமது காலையை நாம் சத்தான உணவோடு தொடங்கினால் அது நம்மை நாள் முழுக்க முழு ஆற்றலோடு வைத்திருக்க உதவும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான வெஜிடபிள் பான்கேக். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பான்கேக்கின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Vegetable Pancake / வெஜிடபிள் பான்கேக்Vegetable Pancake / வெஜிடபிள் பான்கேக்

Vegetable Pancake / வெஜிடபிள் பான்கேக்

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

நாம் வழக்கமாக காலையில் வேலைக்கு கிளம்பும்போதோ அல்லது பிள்ளைகளை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பும்போதோ அவசர அவசரமாக அவர்களுக்கு ஒரு இட்லியோ அல்லது தோசையோ வழக்கமாக செய்து கொடுப்போம். எப்பொழுதுமே தோசை மற்றும் இட்லி தானா? இதற்கு ஒரு விடுவே இல்லையா என்று அவர்கள் பலமுறை கேட்டிருக்கக்கூடும். விடிவு வந்து விட்டது. இந்த வெஜிடபிள் பான்கேக் நாம் வழக்கமாக உண்ணும் இட்லி தோசைக்கு ஒரு அருமையான மாற்று உணவு.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்: 

வெங்காயம், கேரட், மற்றும் முட்டைகோஸ் நன்கு கோதுமை மற்றும் கடலை பருப்பு கலவையில் ஒன்றோடு ஒன்று கலந்து மிகுந்த சுவையாக இருக்கும். இவை உள்ளே மெதுவாகவும் மற்றும் வெளியே சற்று மொறுமொறுப்பாகவும் இருக்கும். இதன் காரணமாக இதனின் சுவை நாள் முழுக்க நம் நாவில் இருந்து நீங்காமல் இருக்கும். பொதுவாக பான்கேக்குகளை முட்டை சேர்த்து தான் செய்வார்கள். ஆனால் இதில் நாம் முட்டை சேர்க்காததால் சைவ பிரியர்களும் இதை உண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி நீங்கள் சமையலில் எக்ஸ்பர்ட் ஆக இல்லாமல் இருந்தாலும் இந்த வெஜிடபிள் பான்கேக்கை வெகு சுலபமாக முதல் முறையிலேயே சரியாக செய்து விட முடியும்.

சில குறிப்புகள்: 

காய்கறி கோதுமை மாவு கலவையை கலக்கும்போது தண்ணீர் அதிகமாகி விடாமல் இருப்பதற்கு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து கிளறவும்.

உங்களுக்கு காரம் பிடிக்காது என்றால் பச்சை மிளகாய் போடுவதை தவிர்த்து விடலாம்.

இவ் உணவின் வரலாறு:

பான்கேக்குகள் ஆதி காலத்தில் இருந்தே மனிதர்களால் உண்ணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் ஐந்தாம் நூற்றாண்டு கிரேக்க இலக்கியங்களில் பான்கேக்குகள் முதல் முதலாக குறிப்பிட பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவ்வளவு வரலாற்றுப் பழமை யான இந்த பான்கேக்குகள் இன்று ஏறத்தாழ உலகம் முழுவதும் பலதரப்பு மக்களால் அந்தந்த பகுதிக்கான உணவு முறைக்கு ஏற்ப செய்யப்பட்டு சுவைக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட பான்கேக் வகைகள் இருக்கிறது என்றால் உலகம் முழுவதும் எத்தனை வகை இருக்கும் என்று யோசிங்களேன்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

வெஜிடபிள் பான்கேக் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

வெஜிடபிள் பான்கேக்கை முழுமையாக சுமார் 45 நிமிடத்தில் இருந்து 50 நிமிடத்திற்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

வெஜிடபிள் பான்கேக்கை ஒரு நாள் பிரிட்ஜில் வைத்து மறுநாள் உண்ணலாம். எனினும் அன்றே உண்டு விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்: 

  • பைனாப்பிள் பேன்கேக்
  • உருளைக்கிழங்கு பேன்கேக்
  • இட்லி
  • ஆப்பம்
  • தோசை

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்: 

வெஜிடபிள் பான்கேக் செய்ய நாம் பயன்படுத்தும் கோதுமை மாவில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

நாம் சேர்க்கும் முட்டைக்கோஸில் நார் சத்து, கால்சியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதயத்திற்கு நல்லது மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

நாம் சேர்க்கும் கடலை பருப்பில் புரத சத்து, நார் சத்து, மற்றும் விட்டமின் B இருக்கிறது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது

Vegetable Pancake / வெஜிடபிள் பான்கேக்Vegetable Pancake / வெஜிடபிள் பான்கேக்